சிறப்புற நடைபெற்ற கரைச்சி பிரதேச கலாசாரப் பெருவிழா..!
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், கரைச்சி பிரதேச செயலகமும் கலாசாரப் பேரவையும் இணைந்து நடாத்திய கலாசாரப் பெருவிழா இன்று( 20.11.2025) வியாழக்கிழமை சிறப்புற நடைபெற்றது.
குறித்த நிகழ்வு கரைச்சி பிரதேச செயலாளரும் கலாசாரப் பேரவைத் தலைவருமான த.முகுந்தன் அவர்களின் தலைமையில், காலை 9.00 மணிக்கு நடைபெற்றது.
கரைச்சி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சு.முரளிதரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.
மேலும் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) அஜிதா பிரதீபன் சிறப்பு விருந்தினராகவும், ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகரும் சமய, சமூக, இலக்கிய விற்பன்னர் செல்வராணி சோமசேகரம்பிள்ளை கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.
இதன்போது பல்வேறு கலை கலாசார நிகழ்வுகள், கரை எழில் – 9 நூல்வெளியீடு, மற்றும் கலைஞர்களுக்கான கரை எழில் விருது வழங்கல் முதலான பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், கரைச்சி பிரதேச சபை தவிசாளர், கண்டாவளை பிரதேச செயலாளர், உதவி மாவட்ட செயலாளர், கிளிநொச்சி மாவட்ட இலங்கை வங்கி முகாமையாளர், கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்கள், மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர், கரைச்சி பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர், மாவட்ட சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் கலாசார பிரிவு உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கலைஞர்கள், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.


