மீண்டும் வலுக்கட்டாயமாக அமர்த்தப்பட்ட புத்த பெருமான்..!
நேற்று (16) பாதுகாப்பின் நிமிர்த்தமாக கொண்டு செல்லப்பட்ட கூறப்பட்ட புத்தர் சிலை மீண்டும் இன்று (17) மதியம் அதே இடத்தில் நிறுவப்பட்டது.
12.08.2025 அன்று கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகளினால் ஆணையாளர் நாயகத்தினால் ஒப்பமிடப்பட்டு குறித்த சட்ட விரோத கட்டுமானத்தை அகற்றுமாறு உடைத்தல் கட்டளை ஒட்டப்பட்டிருந்தது.
04.11.2025 – கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகளினால் சட்ட விரோத கட்டுமானத்தை உடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சட்டவிரோத கட்டுமானங்கள் 3 அகற்றப்பட்டன.
15.11.2025 – இரவு குறித்த பகுதியில் கட்டுமானப் பொருட்கள் இரவோடு இரவாக இறக்கப்பட்டு பெயர்ப்பலகையும் நடப்பட்டது.
16.11.2025 – காலை புத்தர் சிலை வைப்பதற்கான வேலைகளும் கட்டுமானப் பணிகளும் இடம்பெற்றன.
கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகளினால் திருகோணமலை துறைமுக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
கட்டுமானத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
தொடர்ந்தும் கட்டுமானம் இடம்பெற்றது.
இரவு புத்தர் சிலை வைக்கப்பட்டது.
நள்ளிரவு புத்தர் சிலை அகற்றப்பட்டது (பாதுகாப்பிற்காக கொண்டு செல்லப்பட்டது)
பலரினால் பலருக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.
பலரினால் உரிமை கோரப்பட்டன.
17.11.2025 – பாராளுமன்றில் புத்தர் சிலை தொடர்பான விவாதங்கள் இடம்பெற்றன.
மீண்டும் புத்தர் சிலை வைக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரினால் உறுதி வழங்கப்பட்டது.
12 மணியளவில் மாவட்ட செயலகத்தில் கூட்டம் இடம்பெற்றது.
மதியம் மீண்டும் பொலிஸாரினால் குறித்த பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்டது.

