பெருந்தோட்ட தொழிலாளர்ளை சிறு தோட்ட உரிமையாளராக்குங்கள்..!
ஜனாதிபதித் தேர்தல்கள் கொள்கை அறிக்கையில்( விஞ்ஞாபனத்தில்) நாம் முன்வைத்த கொள்கையாகும். இது தான் எமது செல்லுபடியான கொள்கையாகும்.
எனவே இது தொடர்பான ஏனைய கருத்துக்களை புறம்தள்ளி வைத்து விட்டு, ஐக்கிய மக்கள் சக்தியின் இந்த உண்மையான கொள்கையை சமூகமயப்படுத்துவது நமது கடமையாகும்.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையிலேனும் பாராளுமன்றத்தில் விசேட கருத்தை முன்வைக்க இன்று எனக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
இந்த நிலைக்கு நாட்டின் ஜனநாயகத்தை இல்லாதொழிக்க இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

