உலகளாவிய தொழில் முனைவோர் வாரம்..!
“நாம் ஒன்றாக கட்டியெழுப்புவோம்” எனும் தொனிப்பொருளில் 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய தொழில் முனைவோர் வாரம் ICTA மற்றும் டிஜிற்றல் பொருளாதார அமைச்சின் கூட்டு ஏற்பாட்டில்
இலங்கை ஜனநாயக சோசலிச க் குடியரசின் பிரதமரும் கல்வி, உயர்கல்வி, மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கெளரவ கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில்
இன்றைய தினம் (14.11.2025) காலை 09.00 மணிக்கு அலரிமாளிகையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு நிகழ்நிலை மூலம் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் காண்பிக்கப்பட்டதுடன், யாழ்ப்பாண மாவட்ட நிகழ்வானது மேலதிக அரசாங்க அதிபர் திரு.கே.சிவகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், நிகழ்வின் தொடர்ச்சியாக உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் ஆரம்பித்துவைத்தார்.
குறித்த இந் நிகழ்வானது யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அநுராதபுரம், கண்டி,பதுளை, இரத்தினபுரி, காலி, கம்பஹா மற்றும் குருநாகல் ஆகிய ஒன்பது மாவட்டங்களில் இன்றைய தினம் சமநேரத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி),
மாவட்ட செயலக பிரதம கணக்காளர்,பிரதம பொறியியலாளர், உதவி மாவட்டச் செயலாளர் மற்றும் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், தொழில் முனைவோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


