மன்னார் நகரசபை தவிசாளரின் அதிகார துஸ்பிரயோகம்…!

மன்னார் நகரசபை தவிசாளரின் அதிகார துஸ்பிரயோகம்…!

மன்னார் நகரசபை அலுவலகத்தில் நேற்றைய தினம்(03.11.2025) ஜனநாயக தமிழ்தேசிய கூட்டமைப்பு கட்சியினர் தங்களது ஒன்று கூடல் மற்றும் மாகாணசபை தேர்தல் நடவடிக்கை தொடர்பான திட்டமிடல் கலந்துரையாடல் மன்னார் மாவட்ட கூட்டணி தலைவர் திரு .சம்பூரணம் குமரேஸ் தலைமையில் நடத்தியுள்ளனர்.

இவர் முன்னாள் நகரசபை உறுப்பினர் என்பதுடன் மன்னார் ஈழமக்கள் புரட்சிகர முன்னணி (EPRLF) கட்சி நிர்வாகியுமாவார்.
இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சிவசக்தி ஆனந்தன் (EPRLF)
மற்றும் திரு. துளசி ஜனநாயக போராளிகள் கட்சி.
மற்றும் மன்னார் நகரசபை முதல்வர் திரு .டானியல் வசந்தன் (TELO) உட்பட கூட்டணியின் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மன்னார் நகரசபைக்கு சொந்தமான 3 வாடகை மண்டபம் (அரங்குகள்) இருக்க மன்னார் நகரமுதல்வர் தமது அதிகாரத்தை பயன்படுத்தி சர்வாதிகார போக்கில் இவ்வாறான கலந்துரையாடலை நடாத்தியுள்ளனர்.
இது ஒரு அதிகார துஸ்பிரயோக செயல்பாடாகும்.

இந்த நகரசபை கூட்டணி ஆட்சி ஆதரவு என்ற அடிப்படையில் தேசியமக்கள் சக்தி (NPP) மற்றும் முன்னாள் அமைச்சர் திரு. ரிசாட்பதியுதின் அவர்களின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இணைந்து கூட்டாச்சி அமைத்துள்ளார்கள் என்பது குறிப்பிட தக்கது..

இந்த அதிகார துஸ்பிரயோக செயலுக்கு உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் மாவட்ட செயலர், வடமாகாண ஆளுநர் .

மன்னார் மாவட்ட அபிவிருத்திகுழு தலைவர் மற்றும் தேசிய மக்கள் சக்தி அனுரகுமார திசாநாயக்க சனாதிபதி அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமா?

 

 

Recommended For You

About the Author: admin