பிரான்சில் இடம்பெற்ற பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் ஆறு மாவீரர்களின் 18 ஆம் ஆண்டு வீரவணக்க நினைவேந்தல்..!
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் ஆறு மாவீரர்களின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று (01.11.2025) சனிக்கிழமை லாக்கூர்நெவ் பகுதியில் காலை 11.00 மணியளிவில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பொதுச்சுடரை லாகூர்நெவ் தமிழ்ச் சங்கத்தின் விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் ஜெயசந்திரன் ரட்னா அவர்கள் ஏற்றிவைக்க
தமிழீழ அரசியல்த்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் அவரோடு வீரகாவியமாகிய ஆறு மாவீரர்களுக்குமான ஈகைச்சுடரினை 1992 ஆம் ஆண்டு ஜெயசிக்குறு சண்டையில் வீரகாவியமாகிய லெப்ரினன்ட் பாரதி மற்றும் 1998ஆம் ஆண்டு ஓயாத அலைகள் 2 சமரில் வீரகாவியமாகிய வீரவேங்கை சந்தியா ஆகிய இரண்டு மாவீர்ர்களின் சகோதரி அவர்கள் ஈகைச்சுடர் ஏற்றி மலர் மாலை அணிவித்தார்.
கேணல் பரிதி (ரீகன்) அவர்களுக்கு பரிதி அவர்களின் தாயார் ஈகைச்சுடர் ஏற்றி மலர் மாலை அணிவித்தார்..
அகவணக்கத்தைத் தொடர்ந்து
மக்கள் அனைவரும் சுடர் ஏற்றி மலர் தூவி வணக்கம் செலுத்தினார்கள்.
தொடர்ந்து அந்தோனி ரூசேல் அவர்களின் உரை, ,லாகூர்நெவ் மேயர் ஜீல் புக்ஸ் அவர்களின் உரை, லாகூர்நெவ் பள்ளி மாணவி. ரவி ரிசானா அவர்களின் உரை என்பவற்றைத் தொடர்ந்துசிறப்புரையினை.தமிழர் ஒருங்கினைப்பு குழு சார்பில் செல்வன்.நிதீபன் மகேஸ்வரன் அவர்கள் ஆற்றிய இருந்தார்.
நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் பாடல் ஒலிக்க தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற தாரக மந்திரத்துடன் நினைவேந்தல் நிகழ்வு நிறைவு பெற்றது.


