இலங்கையில் இன்று பெருநிலவை (சூப்பர் மூன்) காணலாம்!
இலங்கையர்கள் இன்று ஒரு அரிய சூப்பர் மூன் நிகழ்வைக் காண ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆர்தர் சி. கிளார்க் மேம்பட்ட தொழில்நுட்ப நிறுவனம் (Arthur C. Clarke Institute for Advanced Technology) வெளியிட்டுள்ள தகவலின்படி, சந்திரன் வழமையான பௌர்ணமி சந்திரனை விட சுமார் 7 சதவிகிதம் பெரிதாகவும், பிரகாசமாகவும் தோன்றும்.
மேலும், வானத்தை நோக்குவோருக்கு இந்த கண்கவர் காட்சியை அளிக்கும் வகையில், சனி கிரகம் (Planet Saturn) முழு நிலவுக்கு அருகில் தெரியும் என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
சூப்பர் மூன் காரணமாக வழமையான நாட்களை விட கடலோரப் பகுதிகளில் அலைகள் அதிகமாக ஏற்படக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளதால், கடலோரப் பகுதிகளுக்கு அருகில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

