மன்னார் மாவட்டத்தில் கருவேல மர கட்டுப்பாடு குறித்து விசேட கலந்துரையாடல்..!
மன்னார் மாவட்டத்தில் கருவேல மரத்தின் பரவலை கட்டுப்படுத்துவதற்கான விசேட கலந்துரையாடல் இன்று (03.10.2025) காலை 11.00 மணியளவில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு க. கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


