கரைச்சி பிரதேச சபை பொது நூலகத்தின் ஏற்பாட்டில் புத்தகக்கண்காட்சி ஆரம்பம்..!

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கரைச்சி பிரதேச சபை பொது நூலகத்தின் ஏற்பாட்டில் புத்தகக்கண்காட்சி ஆரம்பம்..!

மாணவர்கள் மத்தியில் நூலக பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்குடன் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கரைச்சி பிரதேச சபை பொது நூலகத்தின் ஏற்பாட்டில் புத்தக கண்காட்சி இன்று(03.10.2025) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 

கரைச்சி பிரதேச சபை பொது நூலக நூலகர் சசிகலா ரவீந்திரராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கரைச்சி பிரதேச சபைத்தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் கலந்து கொண்டார்.

 

கரைச்சி பிரதேச சபை பொது நூலகத்தின் இருப்பிலுள்ள புத்தகங்களுடன், புதிய புத்தகங்களும் இணைந்த வகையில் குறித்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

குறித்த நிகழ்வில் பிரதேச சபை செயலாளர் தங்கபாண்டி ஞானராஜ், செல்வாநகர் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை முதல்வர், பிரதேச சபை சனசமூக நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 

பார்வையற்றவர்கள் கற்க கூடிய புத்தகங்கள் உள்ளடங்களாக மாணவர்கள் முதல் அனைவரும் பயன்பெறும் வகையில் குறித்த கண்காட்சி ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

 

குறித்த புத்தகக் கண்காட்சி நாளைய தினமும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin