மன்னார் காற்றாலையும் அதன் பிணாமிகளும்..!

மன்னார் காற்றாலை திட்டத்த்தை அதானி நிறுவனம் விலகிய பின்னர் ஜேவிபி ஆட்சியாளர்கள் குறித்த திட்டத்தை Hayleys Fentons LTD நிறுவனத்திடம் வழங்கிருக்கின்றார்கள்
`
இந்த Hayleys Fentons LTD நிறுவனம் மஹிந்த ராஜபக்சே குடும்பத்தின் பினாமியான கசினோ வர்த்தகர் திரு தம்மிக்க பெரேராவின் Hayleys PLC யின் 99.97 % வீத கட்டுப்பாட்டிலுள்ள துணை (Subsidiary) நிறுவனமாகும்
அதே போல Hayleys PLC யில் ஆதிக்கம் செலுத்தும் (Influence-Soft Power) மற்றுமொரு நபராக கோத்தபாயா ராஜபக்சேவின் பினாமியான ரேயினர் சில்வா (சூரியன் FM- துமிந்த சில்வாவின் சொந்த சகோதரர்) இருக்கின்றார்
அதாவது குறித்த Hayleys PLC யின் இரண்டாவது மிக பெரிய தனியார் முதலீட்டாளாராக (Second Largest Individual Shareholder) ரேயினர் சில்வா இருக்கின்றார்

இவர்கள் தான் இந்த நிறுவனங்களின் Operating மற்றும் Finance நடவடிக்கைளில் செல்வாக்கு செலுத்தி கட்டுப்படுத்தும் அதிகார மையங்களாக இருக்கின்றார்கள்

இவர்களின் நிறுவனத்தினரிடம் தான் கேள்விப்பத்திர நடைமுறைகள் மீறப்பட்டு மன்னார் காற்றாலை திட்டத்தை ஜேவிபி வழங்கியிருக்கின்றது

திருமதி சந்திரிகா குமாரதுங்க ஆட்சியில் திரு அனுரகுமார திஸநாயக்க விவசாய அமைச்சராகவிருந்த போது உர கூட்டுத்தாபனத்தில் ரூபா 8 மில்லியனை திருடிய தற்போதைய ஜேவிபியின் மின்சக்தி அமைச்சர் திரு குமார ஜெயக்கொடி தான் இதன் சூத்திரதாரியாக இருக்கின்றார்

ஏற்கனவே இந்த Hayleys நிறுவனத்தின் துணை (Subsidiary) நிறுவனங்களின் ஒன்றான Dipped Products PLC தங்கள் இரத்துபஸ்வல (Rathupaswala) பகுதியில் நிலத்தடி நீரை மாசுபடுத்தியத்தை எதிர்த்து 2013 ஆம் ஆண்டு அப் பிரதேச மக்கள் நடத்திய போராட்டம் மீது , ராஜபக்சே நிர்வாகம் துப்பாக்கி நடத்தி மூன்று பேரை கொ*ன்று இருந்தனர்
ரூபா 575 மில்லியன் ரூபா வரி ஏய்ப்பு மோசடி உட்பட பல்வேறு குற்றசாட்டுகளுடன் தொடர்புடைய தம்மிக்க பெரேரா ராஜபக்ச சகோதரர்கள் அதிகாரத்திலிருந்த போது சக்திமிக்க வியாபாரியாக இருந்தார்

குறித்த காலத்தில் பல்வேறு அரசு நிறுவனங்களின் தலைவராகவும் அமைச்சுக்களின் செயலாளராகவும் ,தேசிய பட்டியல் பாராளமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் கடமையாற்றியிருந்தார்

குறிப்பாக தம்மிக்க பெரேரா இலங்கைப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் பிரதிப் பணிப்பாளாராக இருந்த போது 5 மில்லியன் ரூபா அரச பணத்தை முறைகேடாக திரு நாமல் ராஜபக்சேவின் இளைஞர்களுக்கான நாளை என்கிற இளைஞர் அமைப்பிற்கு கைமாற்றிய குற்றச்சாட்டில் 2015 ஆம் ஆண்டு கைதும் செய்யப்பட்டு இருந்தார்

இந்த ராஜபக்சே பினாமிகள் நிறுவனத்திற்காக தான் மிக செறிவான மக்கள் குடியிருப்புகளுக்கு நடுவே மன்னாரில் காற்றாலைகளை அமைக்க முயற்சிக்கின்றார்கள்

கடல்மட்டத்தை விட மிக தாழ்ந்த நிலப்பரப்பான மன்னார் தீவின் வாழ்வாதாரமான கடற்தொழிலை சிதைத்து ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மன்னார் மக்களின் வாழ்க்கையை அடகு வைத்து மின்சாரம் பெற போவதாக சொல்லுகின்றார்கள்

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஓய்வு நிலை பேராசிரியர் சூசை ஆனந்தன் தனது ஊரில் கிட்டத்தட்ட 350 வள்ளம் நிற்கின்றது என்கின்றார்

ஆனால் கடலுக்கு போவது 10, 15 வள்ளம் தான்.

ஏனென்றால் அந்தளவிற்கு மீன் இல்லை. கறிக்கே மீன் இல்லை.

மீனவர்கள் வள்ளத்தை இழுத்து வைத்திட்டு நிறையப் பேர் கூலிக்கு அட்டை பிடிக்கிறதற்கு நிற்கிறார்கள்.
நிறையப்பேருக்கு தொழில் இல்லாமல் சரியான கஸ்டம்

இவ்வாறான பல சூழ்நிலைகளின் விளைவாக 4 பக்கமும் கடலால் சூழப்பட்ட இலங்கை தீவின் மீன் உற்பத்தி இந்த ஆண்டு 12.5 % வீழ்ச்சியடைந்து இருக்கின்றது (Y-o-Y, மே, 2025)
ஆனால் எந்த தீர்வும் இல்லை

கற்றாலை திட்டம் ஏற்படுத்தக்கூடிய வெள்ளத் தாக்கம் குறித்து சரியான ஆய்வுகள் எதுவுமே நடத்தாமல் காற்றாலைக்கான அனுமதியை வழங்கியிருக்கின்றார்கள்

இதன் விளைவாக அங்கு ஏற்கனவே உள்ள காற்றாலைகளுக்கான வீதி கட்டமைப்புகள் காரணமாக மன்னாரின் பல கிராமங்கள் சிறிய மழைக்கே வெள்ளகாடாகி போகின்றன என சொல்லுகின்றார்கள்
அதே போல பறவைகளின் வழித்தடங்களுக்கு தடையாகவுள்ள இடங்களுக்கும் கூட காற்றாலையை நிறுவ அனுமதி கொடுத்திருக்கின்றார்கள்

இது போதாதென்று குறித்த திட்டத்திற்கான Environmental Impact Assessment (EIA) அறிக்கை கூட வெறும் பழைய தரவுகளை அடிப்படையடையாக கொண்டது என சொல்லப்படுகின்றது

உண்மையில் வேற மாதிரி யோசிக்க வேண்டியவை நிறைய இருக்கின்றன.
கடல்வளங்களை மீன்பிடிக்கு, சுற்றுலாப் பயணத்துறைக்கு வினைத்திறனுடன் பயன்படுத்தி மன்னனரில் எவ்வளவு விடயங்களை செய்யலாம்

ஆனால் மேற்படி உண்மைகளையெல்லாம் மறைத்து விட்டு தம்மிக்க பெரேரா 50,000 மக்களின் வாழ்க்கையை சிதைத்து மின்சாரம் (National Grid) தருவார் என உலகில் எந்த பகுதியிலும் நடக்காத கதைகளை சொல்லுகின்றார்கள்
ஜேவிபி மின்சார கட்டணத்தை 1/3 குறைப்பதாக வாக்குறுதி வழங்கியிருந்த நிலையில் கடந்த 6 மாத காலப்பகுதியில் இலங்கை மின்சார சபை ரூபா 13.1 மில்லியன் (Q 1 & Q 2) நட்டமடைந்திருக்கின்றது

இந்த உண்மைகளையெல்லாம் மறைத்து விட்டு ஜேவிபி பணம் கொடுத்து இயக்கம் சமூக தள பக்கங்களில் பொருளாதார நிபுணர்களாகி பல கதைகள் சொல்லுகின்றார்கள்

Recommended For You

About the Author: admin