எம்.கே சிவாஜிலிங்கத்திற்கு கிடைக்கவுள்ள பதவி..!

வெகு விரைவில் வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ்த் தேசிய பேரவையின் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் அப்புலிங்கம் உதயசூரியன் தானாக முன்வந்து பதவி விலகல் செய்துள்ளார்.

இதனூடாக மூத்த அரசியல் தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம் உறுப்பினராக சபைக்குள் செல்வதற்கான வாய்ப்பினை வழங்கியுள்ளார்.

அவரது தன்னலமற்ற முன்மாதிரியான செயற்பாட்டிற்கு தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் தொடர்பான கலந்துரையாடல் நேற்று 28-09-2025 வல்வெட்டித்துறையில் சிவாஜிலிங்கம் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

அங்கு உரையாற்றும் போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உதயசூரியனுக்கு பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin