இரண்டாம் நாளாக தொடரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம்..!
இலங்கையின் உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கின்றோம் மற்றும் தமிழின அழிப்பு வலிந்து காணமால் ஆக்கப்படுதல் மற்றும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித புதை குழிகள் குறித்து நாம் சர்வதேச சுயாதீன விசாரணையை மட்டுமே கூறுகின்றோம் எனும் தொனிப்பொருளில்
செம்மணியில் வலிந்து காணமால் ஆக்கபட்பவர்களின் உறவுகளின் சங்கம் வடக்கு கிழக்கு மாகாணம் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு சுழற்சி முறையில் நடை பெற்று வரும் உண்ணாவிரத போராட்டமானது இன்றய தினம் இரண்டாவது நாளாக முல்லைத்தீவு மாவட்டத்தால் இன்று காலை 10 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது
இவ் உண்ணா விரத போராட்டத்தில் முல்லைத்தீவு காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் பொது மக்கள் இளைஞர்கள் மக்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்
இவ் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டமானது எதிர் வரும் முதலாம் திகதி வரை மாவட்ட ரீதியில் தொடர்ந்து இடம் பெரும் என்பது குறிப்பிடத்தக்கது

