போதைப் பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கடத்தப்பட்ட தங்க பிஸ்கட்களுடன் SLAF அதிகாரி கைது
இலங்கை விமானப்படையின் (SLAF) புலனாய்வு அதிகாரி ஒருவர், ரூபா 20 மில்லியன் பெறுமதியான தங்கத்தை நாட்டிற்குள் கடத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) இலங்கை சுங்கப் பிரிவின் போதைப் பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
17 வருடங்கள் இலங்கை விமானப்படைக்கு சேவை செய்துள்ள 37 வயதுடைய இந்த அதிகாரி, நேற்று (18) வருகை முனையம் வழியாக வெளியேற முற்பட்ட போது இடைமறிக்கப்பட்டார்.
உடல் சோதனையின் போது, 24-கரட் தூய்மையான, தலா 10 அல்லது 20 கிராம் எடையுள்ள 40 தங்க பிஸ்கட்கள், மொத்த எடை 550 கிராம், அவரது இடுப்பைச் சுற்றி மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் ரூபா 20 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

