தமிழர் பகுதியில் 15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்..! இரு இளைஞர்கள் கைது

தமிழர் பகுதியில் 15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்..! இரு இளைஞர்கள் கைது

முல்லைத்தீவு – உடையார்கட்டு பகுதியில் சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கடந்த 9ஆம் திகதி உடையார் கட்டு பகுதியில் வசிக்கும் 15 வயதுடைய சிறுமி ஒருவரை சுதந்திரபுரம் பகுதியை சேர்ந்த 23 வயதான இளைஞன் ஒருவன் வீடொன்றிற்கு இரவு வேளை அழைத்து சென்று துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியமையை அறிந்த உறவினர்கள், புதுக்குடியிருப்பு பொலிஸில் முறைப்பாடு வழங்கியதற்கு அமைய, குறித்த சிறுமியை துஷ்பிரயோகப்படுத்திய குற்றச்சாட்டில் 23 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர்களுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் வீட்டின் உரிமையாளரான 23 வயதுடைய மற்றுமொரு இளைஞனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இருவரும் புதுக்குடியிருப்பு பொலிஸாரின் விசாரணையின் பின்னர் தடயவியல் பொலிஸாரின் அறிக்கையோடு, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Recommended For You

About the Author: admin