காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவு..!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் எதிர்வரும் 30 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் செம்மணிப் போராட்டம் வலுப்பெற அதற்கு ஆதரவு வழங்குவதாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ்.மாவட்ட இணைபாளர் இன்பம் அறிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தின் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்

மேலும் தெரிவிக்கையில், குறித்த போராட்டம் கிட்டு பூங்காவிலிருந்து ஊர்வலமாக ஆரம்பித்து செம்மணியில் பிரதான கூட்டத்துடன் நிறைவு பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் வெற்றிபெற வேண்டும் என்பதே எமது எதிர்பார்பு.

தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் ஒற்றுமையீனங்கள் மற்றும் குளறுபடிகளால் தான் எந்தவொரு போராட்டமும் முழுமையான இலக்கை அடையாது இருப்பதற்கு காரணமாக இருக்கிறது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்பால் ஒழுங்கு செய்யப்பட்டு இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த நியாயமான போராட்டத்தை பொது அமைப்புகளும் மக்களும் இணைந்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன் என தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin