இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி: அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்று குறைந்தது
இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று (ஆகஸ்ட் 21) அமெரிக்க டொலருக்கு எதிராக மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. வணிக வங்கிகளில் நேற்று புதன்கிழமையை விட நேற்று ரூபாவின் பெறுமதி குறைந்துள்ளது.
செலான் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 298.30 ரூபாவில் இருந்து 298.35 ரூபாவாகவும், விற்பனை விலை 303.80 ரூபாவில் இருந்து 303.85 ரூபாவாகவும் உயர்ந்துள்ளது.
NDB வங்கியின் அறிக்கையின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகள் முறையே 298.35 ரூபாவில் இருந்து 298.50 ரூபாவாகவும், 304.85 ரூபாவில் இருந்து 305 ரூபாவாகவும் அதிகரித்துள்ளன.
மக்கள் வங்கி வெளியிட்டுள்ள தகவலின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 298.18 ரூபாவில் இருந்து 298.23 ரூபாவாக உயர்ந்துள்ளது, அதேவேளை விற்பனை விலை 304.81 ரூபாவில் இருந்து 304.59 ரூபாவாக சற்று குறைந்துள்ளது.

