மின்சார வாகனங்களுக்கு புதிய வரி அறிமுகம்; பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்டது
எரிபொருள் மூலம் இயங்கும் மோட்டார்களைக் கொண்ட மின்சார வாகனங்களுக்கு புதிய கலால் வரி வகையை இலங்கை அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கான முன்மொழியப்பட்ட சட்டதிட்டங்கள் பாராளுமன்றத்தில் நேற்று (21) அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டன.
தொழில் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர், கலாநிதி. அனில் ஜயந்த, தற்போதைய வகைப்பாட்டில் இல்லாத வாகனங்கள், பொதுவான வரி வகைக்குள் சேர்க்கப்பட்டு, அதிகளவான வரி செலுத்த நேரிடுவதாக விளக்கினார்.
முழுமையாக மின்சாரமாகவோ அல்லது முழுமையாக கலப்பினமாகவோ (hybrid) இல்லாத, ஆனால் இரண்டுக்கும் இடைப்பட்ட வாகனங்களுக்கு இந்த புதிய வகைப்பாடு பொருந்தும். இந்த வகைப்பாட்டின் கீழ், வாகனத்தின் ஆடம்பரம் மற்றும் விலைக்கேற்ப வரி விகிதங்கள் சரிசெய்யப்பட்டு, சிறப்பு கலால் வரிகள் விதிக்கப்படும்.
புதிய முறை பின்வருவனவற்றை உறுதி செய்யும் என்று கலாநிதி. ஜயந்த வலியுறுத்தினார்:
* குறைந்த விலையுள்ள வாகனங்களுக்கான வரிச் சுமையைக் குறைத்தல்
* ஆடம்பர மாடல்களுக்கு அதிக வரிகளை விதித்தல்
* நவீன வாகன வகைகளுக்கு நியாயமான மற்றும் நடைமுறை ரீதியான வகைப்பாட்டை உறுதி செய்தல்

