சூரியவவவில் STF-உடனான துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் ஒருவர் பலி

சூரியவவவில் STF-உடனான துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் ஒருவர் பலி

ஹம்பாந்தோட்டை, சூரியவவவிலுள்ள வேவேகம காட்டுப் பகுதியில் விசேட அதிரடிப்படையினருடன் (STF) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதே சந்தேகநபர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் காயமடைந்த STF அதிகாரி ஒருவரும் சூரியவவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த மோதலில் இரண்டு சந்தேகநபர்கள் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டின் போது தப்பிச் சென்றுள்ளார். துப்பாக்கிச் சூட்டின் போது சந்தேகநபர்கள் அதிகாரிகளை நோக்கி கையெறி குண்டை வீசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சந்தேகநபர், அண்மையில் கொஸ்கொடவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவராக இருக்கலாம் என பொலிஸார் நம்புகின்றனர்.

Recommended For You

About the Author: admin