ஆளுநரை சந்தித்த ஊர்காவற்துறை பிரதேசபையினர்..!
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளர் அ.அன்னராசா தலைமையிலான குழுவினர் திங்கட்கிழமை (18.08.2025) ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இதன்போது பிரதேச சபையின் தேவைப்பாடுகள் தொடர்பில் தவிசாளரால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதுடன் அது தொடர்பான மனுவும் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது.


