அனுமதி இன்றி பெயர் பலகை வைக்க முயற்சி

அனுமதி இன்றி பெயர் பலகை வைக்க முயற்சி – பிரதேச சபை உறுப்பினர்களின் தலையீட்டினால் இடைநிறுத்தம்!

சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ஆண்டியடி சந்தியில் சம்மாந்துறை பிரதேச சபையின் அனுமதி இன்றி வீரமுனை எனும் கிராமத்தை காட்டும் பெயர் பலகை ஒன்றினை அமைப்பதற்கான நடவடிக்கை இன்று (18) திங்கட்கிழமை எடுக்கப்பட்டது.

 

இவ்விடத்தை அறிந்த சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினர்களான அமீர் அப்னான், எம்.ஆர்.ஆஷிக் அஹமட், நயீம் (ஆசிரியர்) ஆகியோர் குறித்த இடத்திற்கு வருகை அதிகாரிகளுடன் பெயர் பலகை அமைத்தல் தொடர்பான நியாயமான கருத்துக்களை முன் வைத்தனர்.

 

இதன் போது, குறித்த அதிகாரிகளுடன் பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல் சம்மாந்துறை பிரதேச சபையில் இடம்பெற்றது.

 

இவ்விடயம் தொடர்பாக பிரதேச சபை உறுப்பினர் அமீர் அப்னானிடம் வினவியபோது “அதிகாரிகளுக்கு பெயர் பலகை அமைத்தல் தொடர்பான நியாயமான கருத்துக்களை முன் வைத்துத்தோம் அதனை அவர்கள் ஏற்றுக் கொண்டு பெயர் பலகை அமைத்தல் விடயத்தை இடைநிறுத்தி உள்ளதாக தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin