சுழிபுரம் மேற்கு கலைமகள் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா..!
சங்கானை கல்விக் கோட்டத்திற்குட்பட்ட சுழிபுரம் மேற்கு கலைமகள் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா “விளையாடி மகிழ்வோம்” எனும் தொனிப்பொருளில் முன்பள்ளி முகாமைத்துவ குழுமத்தலைவர் வடிவேலு கோகுலநேசன் தலைமையில் 17.08.2025ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்வில் முதன்மை நிகழ்வாக விருந்தினர்கள் சுழிபுரம் மேற்கு ஹரிகர புத்திர ஐயனார் ஆலயத்திலிருந்து பூஜை வழிபாடுகளுடன் அழைத்து வரப்பட்டனர் .
தொடர்ந்து விளையாட்டு நிகழ்வுகளை நிகழ்வின் பிரதம விருந்தினர் தவிசாளர் சண்முகநாதன் ஜயந்தன் ஆரம்பித்து வைத்தார் . தொடர்ந்து மாணவர்களின் விளையாட்டு நிகழ்வுகள் , உடற்பயிற்சி,விநோத உடை போட்டி ,பெற்றோருக்கான நிகழ்வு ,சங்கானை கல்வி கோட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான போட்டிகள் என்பன முன்னெடுக்கப்பட்டன.
நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் சீனிவாசகம் இந்திரகுமார் , சுழிபுரம் மேற்கு குடும்ப நல உத்தியோகத்தர் எழில்ரன் ஜெனற் நிலானி , வலிகாமம் மேற்கு முன்பள்ளி ஆசிரியர் சங்க இணைப்பாளர் ரகுநாதன் சத்தியரூபி ஆகியோரும்
கௌரவ விருந்தினர்களாக காரைநகர் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் கீர்த்திகா சரவணன்,அலைமகள் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கம் சார்பில் இராசரத்தினம் தயாபரன் மற்றும் சுழிபுரம் மேற்கு சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள்,மாணவர்கள் ,பெற்றோர்கள் , ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

