சென்னை – யாழ்ப்பாணம் இன்டிகோ விமான சேவை மூலம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திறங்கிய கணவன் மற்றும் மனைவி நேற்று (7) விமான நிலைய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில், இந்த ஜோடி 1996 ஆம் ஆண்டு மன்னாரில் இருந்து படகில் இந்தியாவுக்குச் சென்று, அங்கிருந்து தமிழ்நாட்டின் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது.
அத்துடன், இந்தத் தம்பதி விமானம் மூலம் யாழ்ப்பாணம் வந்திறங்கிய நிலையில், விமான நிலைய குடிவரவு அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு, பின்னர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

