இலங்கை விமானப்படைக்கு அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து இரண்டு எரிபொருள் நிரப்பும் வாகனங்கள் நன்கொடை

அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து இலங்கை விமானப்படைக்கு (SLAF) உயர் பெறுமதியான இரண்டு எரிபொருள் நிரப்பும் வாகனங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

இது இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஒரு முக்கிய மைல்கல்லை குறிக்கிறது.

எவ்வித கட்டணமும் இன்றி வழங்கப்பட்ட இந்த எரிபொருள் நிரப்பும் வாகனங்கள் நேற்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

இது விமானப்படையின் செயல்பாட்டு திறன்களை மேம்படுத்துவதற்கு மிகவும் பெறுமதியான ஆதரவு என தெரிவித்துள்ள விமானப்படை, இந்த பங்களிப்பிற்காக அமெரிக்க அரசாங்கத்திற்கும் அமெரிக்க தூதரகத்திற்கும் தமது நன்றிகளை தெரிவித்து அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin