வருமான வரி: உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அறிவிப்பு

இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD), வரி செலுத்துவோர் 2025/2026 மதிப்பீட்டு ஆண்டிற்கான மதிப்பிடப்பட்ட வரி செலுத்த வேண்டிய அறிக்கையை (SET) 2025 ஆகஸ்ட் 15 ஆம் தேதி அல்லது அதற்கு முன் இணைய முறையில் சமர்ப்பிக்குமாறு நினைவூட்டியுள்ளது.

மதிப்பீட்டு அறிக்கை (SET) மற்றும் 2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான கணக்கு அறிக்கையை தாக்கல் செய்வதற்கான இணைய சேவைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும், இவை 2025 நவம்பர் 30 ஆம் தேதி அல்லது அதற்கு முன் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நிறுவன வருமான வரி, பங்குடமை வருமான வரி மற்றும் தனிநபர் வருமான வரி, எளிமைப்படுத்தப்பட்ட வருமான அறிக்கை உட்பட அனைத்துக்கும் இந்தக் காலக்கெடுக்கள் பொருந்தும்.

தாமதமாக செய்யப்படும் கொடுப்பனவுகளுக்கு வட்டி மற்றும் அபராதம் விதிக்கப்படும் என திணைக்களம் எச்சரித்துள்ளதுடன், கொடுப்பனவுகளை மேற்கொள்ளும்போது சரியான வரி வகை மற்றும் கொடுப்பனவு காலக் குறியீடுகளைப் பயன்படுத்துமாறும் வரி செலுத்துவோரை வலியுறுத்தியுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட தகவல்களுக்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையதளத்தைப் பார்வையிடுமாறும் வரி செலுத்துவோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin