புனர்வாழ்வு மையங்களில் போதைப்பொருள் பாவனையாளர்கள் அதிகரிப்பு: 511 பேருக்கு இடவசதி
புனர்வாழ்வுப் பணியகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, புனர்வாழ்வு கோரி வரும் போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கண்டகாடு, சேனாபுரம் மற்றும் வவுனியா ஆகிய புனர்வாழ்வு நிலையங்களில் தற்போது 609 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையங்கள் ஒரே நேரத்தில் 1,120 பேரை தங்கவைக்கும் வசதியைக் கொண்டுள்ளன.
மூன்று நிலையங்களிலும் மேலும் 511 பேரை தங்கவைக்க இடவசதி உள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.

