வனப்பாதுகாப்புத் திணைக்களத்தால் விசேட விசாரணை ஆரம்பம்: வனப்பகுதிகளில் துப்பாக்கி வைத்திருப்போருக்கு எச்சரிக்கை
யானைகள் போன்ற வனவிலங்குகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதையடுத்து, வனப்பகுதிகளில் துப்பாக்கிகள் வைத்திருப்பது குறித்து வனப்பாதுகாப்புத் திணைக்களம் விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளது.
வனப்பாதுகாப்புப் பணிப்பாளர் நாயகம் சந்திம பலமக்கும்புர இதனைத் தெரிவித்தார். இந்த விடயம் குறித்து ஆராய்வதற்காக பல பிராந்தியக் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

