கிளிநொச்சி மாவட்டச் செயலக மேலதிக அரசாங்க அதிபராக(காணி) பி.அஜிதா கடமைகளைப் பொறுப்பேற்பு..!

கிளிநொச்சி மாவட்டச் செயலக மேலதிக அரசாங்க அதிபராக(காணி) பி.அஜிதா கடமைகளைப் பொறுப்பேற்பு..!

கிளிநொச்சி மாவட்டச் செயலக மேலதிக அரசாங்க அதிபராக(காணி) திருமதி.அஜிதா பிரதீபன், இன்று(22.07.2025) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில், மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் முன்னிலையில், காலை 09.02 மணிக்கு அவர் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

நல்லூர் பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளராகக் கடமையாற்றி வந்த நிலையிலேயே, இவர் மேலதிக அரசாங்க அதிபராக(காணி) நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக அரசாங்க அதிபராக(காணி) கடமையேற்ற பி.அஜிதா, முன்னர் பதவிஸ்ரீபுர, கிண்ணியா, பருத்தித்துறை, நல்லூர் ஆகிய பிரதேச செயலகங்களில் உதவிப் பிரதேச செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதம கணக்காளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், நிர்வாக உத்தியோகத்தர், மாவட்ட பொறியியலாளர், கணக்காளர், மாவட்ட புள்ளிவிபரவியலாளர், மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: admin