நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தப் திருவிழாவின் கொடிச்சீலைக்கான காளாஞ்சி கலாச்சார முறைப்படி கையளிப்பு..!
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழாவை முன்னிட்டு, கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் பாரம்பரிய நிகழ்வு இன்று (21.07.2025) காலை சிறப்பாக இடம்பெற்றது.
வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் இணைந்து பந்தற்கால் நடும் நிகழ்வும் நடத்தப்பட்டதோடு, பரம்பரையாக கொடிச்சீலை வடிவமைக்கும் மரபுடையவர்களுக்கு வழங்கப்படும் காளாஞ்சி, நல்லூரிலிருந்து கல்வியங்காட்டுக்கு பாரம்பரிய மாட்டுவண்டி ஊடாக அழைத்துச் செல்லப்பட்டு, கலாச்சார மரபின்படி பத்திரிகையுடன் இணைந்து கையளிக்கப்பட்டது.
இந்த ஆண்டு நல்லூர் பெருந்திருவிழா, ஜூலை 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை நடைபெறும் கொடியேற்றதுடன் திருவிழர் ஆரம்பமாகவுள்ளது


