முல்லைத்தீவு மாவட்ட பெண் சாரணர் இயக்கத்தின் அணிவகுப்பு நிகழ்வு..!
முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகளின் பெண் சாரணர் படையணியின் அணிவகுப்பு நிகழ்வு இன்றைய(18.07.2025) தினம் காலை 10.30 மணிக்கு முல்லைத்தீவு மாகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் வித்தியாலய முதல்வர் திரு.மோகனஜீவன் தலைமையில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் அணிவகுப்பு மரியாதையினையும் பார்வையிட்டார்.
குறித்த நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன், இலங்கைக்கான பெண் சாரணிய இயக்கத்தின் அதிகாரிகள், மாவட்ட பயிற்றுவிப்பாளர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


