முல்லைத்தீவு தேவிபுரத்தில் இடம்பெற்ற பொங்கல் விழா..!
முல்லைத்தீவு தேவிபுரத்தில் தேவிபுரம் கிராம அலுவலர் தலைமையில் பொங்கல் விழா நிகழ்வு 16.01.2026 வெள்ளிக்கிழமை சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
தேவிபுரம் கிராமத்தின் சமூக மட்ட அமைப்புக்களுடைய ஏற்பாட்டில் இடம்பெற்ற மேற்படி பொங்கல் நிகழ்வில் கனடிய பாராளுமன்ற உறுப்பினர் ஜீனிதா நாதன் கலந்து சிறப்பித்திருந்தார்.
இதன்போது சிறுவர்கள் மற்றும் முதியோர்களுக்கான பாரம்பரிய போட்டி நிகழ்வுகள் நடாத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றிருந்தது

