முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் உற்பத்தித்திறன் விருத்தியினை மேம்படுத்தும் செயலமர்வு..!

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் உற்பத்தித்திறன் விருத்தியினை மேம்படுத்தும் செயலமர்வு..!

தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான உற்பத்தித்திறன் விருதினை இலக்காக கொண்டு, முல்லைத்தீவு மாவட்ட செயலக மற்றும் அதனோடிணைந்த பிரதேச செயலகங்களினை சேர்ந்த பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமைத்துவ குழுவை சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கான “Archiving Excellence through Quality and Productivity” எனும் தலைப்பிலான பயிற்சி நிகழ்ச்சித் தொடரின் நான்காவது செயலமர்வானது முல்லைத்தீவு மாவட்ட செயலக திறன் விருத்தி பயிற்சிப் பிரிவின் ஏற்பாட்டில் இன்று (07) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வின் வளவாளராக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திரு.அ உமாமகேஸ்வரன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.

இவர் தனது விரிவுரையில் புத்தாக்க முகாமைத்துவம் (Innovation Management )எனும் விடயத்தினை உற்பத்தி திறன் செயலகத்தின் உற்பத்தித்திறன் விருதிற்கான வழிகாட்டல் கையேட்டுடன் தொடர்புபடுத்தி விரிவாக தெளிவுபடுத்தியிருந்தார்.

இந்தப் பயிற்சி நிகழ்ச்சியில் மேலதிக மாவட்ட செயலாளர்கள், பிரதம உள்ளக கணக்காய்வாளர், பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், கணக்காளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் உட்பட மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமைத்துவ குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

Recommended For You

About the Author: admin