வெலிகமவில் வழக்கறிஞர் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு: விசாரணை ஆரம்பம்!
வெலிகம, உடுகாவ பிரதேசத்தில் இன்று அதிகாலை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
பொலிஸ் தகவல்களின்படி, இன்று அதிகாலை 4:40 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், ஒரு வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்த வீடு ஒரு வழக்கறிஞருக்கு சொந்தமானது என நம்பப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டின் விளைவாக வீட்டின் பிரதான வாயிலுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான தேடுதல் நடவடிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.

