இரத்தினசிங்கப் பிள்ளையார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்..!

இரத்தினசிங்கப் பிள்ளையார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்..!

திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ இரத்தினசிங்கப் பிள்ளையார் ஆலய வருடார்ந்த பிரம்மோற்ஸவம் மங்களகரமான விசுவாவசு வருடம் ஆனிமாதம் 31ஆம் நாள் 15.07.2025 செவ்வாய்க்கிழமை இன்று காலை 8.00 மணிக்கு துவஜாரோகணம் எனப்படுகின்ற கொடியேற்ற நிகழ்வுடன் ஆரம்பமாகி, தொடர்ச்சியாக பத்து நாட்கள் இடம்பெறும். இதன்போது 23.07.2025 புதன்கிழமை இரதோற்ஸவமும், மறுநாள் வியாழக்கிழமை ஆடி அமாவாசை தீர்த்த உற்ஸவமும் இடம்பெறவுள்ளது.

 

தினமும் காலை 6.00 மணிக்கு அபிஷேகம், 7.00 மணிக்கு மூலஸ்தான பூசை, 8.00 மணிக்கு தம்ப பூசை இடம்பெற்று தொடர்ந்து வசந்த மண்டப பூசையுடன் காலை திருவிழா நிறைவுபெறும். பிற்பகல் 3.00 மணிக்கு அபிஷேகம், தொடர்ந்து மூலஸ்தான பூசைகள் நடைபெற்று, தொடர்ந்து தம்ப பூசை, வசந்த மண்டப பூசையுடன் இரவு 7.30 மணிக்கு திருவிழா நிறைவுபெறும்.

Recommended For You

About the Author: admin