ஹோமாகம பொலிஸார் இன்று காலை கட்டுவான வீதிக்கு அருகில் உள்ள ஒரு புதர் நிறைந்த காட்டுப் பகுதியில், தலையில் காயங்களுடன் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் ஒரு ஆணின் சடலத்தை கண்டுபிடித்துள்ளனர்.
கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், குறித்த ஆணின் சடலத்தை மீட்டனர்.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, பாதிக்கப்பட்டவர் கூர்மையற்ற ஆயுதத்தால் தலையில் தாக்கப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
மரணமடைந்தவர் கொட்டாஞ்சேனை, ஜின்டூப்பிட்டியைச் சேர்ந்த 31 வயதுடைய நபர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சடலம் ஹோமாகம வைத்தியசாலை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

