2025 க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் நவம்பர்-டிசம்பரில் நடைபெறும்; சாதாரண தரப் பரீட்சை 2026 பெப்ரவரியில் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர (A/L) மற்றும் சாதாரண தர (O/L) பரீட்சைகளின் அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திக்க குமாரி, 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை இந்த ஆண்டு நவம்பர் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டு வருவதாகவும், அது ஜூலை 21, 2025 அன்று முடிவடையும் என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.
மேலும், ஆணையாளர் நாயகம் குமாரி, 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை (O/L) 2026 பெப்ரவரி மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

