ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் சோகம்: வேடிக்கை பார்த்த 6 பேர் பலி – 100-க்கும் மேற்பட்டோர் காயம்

ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் சோகம்: வேடிக்கை பார்த்த 6 பேர் பலி – 100-க்கும் மேற்பட்டோர் காயம்

பொங்கல் 2026 கொண்டாட்டங்களின் போது தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகளின் போது ஏற்பட்ட விபத்துகளில் 6 பேர் உயிரிழந்துள்ளனா்.

 

மதுரை, வேலூர், சேலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு மற்றும் எருது விடும் விழாக்களில், பாதுகாப்பு வேலிகளைத் தாண்டி காளைகள் முட்டியதிலேயே 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

மதுரையில் (அலங்காநல்லூர் & பாலமேடு) நடைபெற்ற உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகளில், காளைகள் வெளியேறும் பகுதியில் நின்றிருந்த பார்வையாளர்கள் மீது காளைகள் மோதியதில் உயிரிழப்புகள் நேர்ந்துள்ளன.

 

வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவின் போது, ஓடி வந்த காளை முட்டியதில் கே. திலகரா (65) என்ற முதியவர் உயிரிழந்தார்.

 

அதேபோன்று கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் மற்றும் பஸ்தலப்பள்ளி பகுதிகளில் நடைபெற்ற போட்டிகளில், காளை முட்டியதில் இளவரசன் (39) உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.

 

சேலம் மாவட்டம் செந்தாரப்பட்டியில் நடைபெற்ற போட்டியில் காளை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்.

 

 

இந்த மாவட்டங்களில் நடைபெற்ற போட்டிகளில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு அந்தந்த மாவட்ட அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலத்த காயமடைந்தவர்கள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், உரிய நிவாரண உதவிகள் வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.

Recommended For You

About the Author: admin