நவகமுவ துப்பாக்கிச் சூடு தொடர்பில் மேலும் ஒருவர் கைது..!
நவகமுவ, கொரதொட்ட மெனிகாஹார வீதிப் பகுதியில் கடந்த 1ஆம் திகதி இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உதவி வழங்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று (18) களனி, கொஹொல்வில பகுதியில் வைத்து இந்தச் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் பிரவேசித்த வேனின் சாரதியாக குறித்த நபர் செயற்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் களனி பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் என கூறப்படுகின்றது.
நவகமுவ, கொரதொட்ட மெனிகாஹார வீதிப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த மூவரை இலக்கு வைத்து இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது.
அதில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் பலத்த காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

