கந்தரோடை விகாரை பெயர் பலகை அகற்றம்: தவிசாளரிடம் விசாரணை
யாழ்ப்பாணம், வலிகாமம் தெற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் “கந்தரோடை விகாரை” என நாட்டப்பட்டிருந்த திசை காட்டும் பலகைகளை அகற்றியமை தொடர்பாக, இன்று (ஜனவரி 19, 2026) பிரதேச சபை தவிசாளர் தியாகராசா பிரகாஸிடம் காவல்துறையினா் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
கந்தரோடை பகுதியில் உள்ள வரலாற்றுச் சின்னங்களை “கந்தரோடை தொல்லியல் ஆய்வு மையம்” என அடையாளப்படுத்த பிரதேச சபை தீர்மானித்திருந்தது.
ஆனால், சுன்னாகம் சந்தைக்கு அருகில் ஒரு தனியார் நிறுவனத்தால் பிரதேச சபையின் அனுமதியின்றி “கந்தரோடை விகாரை” எனக் குறிப்பிட்டு வைக்கப்பட்டிருந்த பலகை கடந்த ஜனவரி 08 ஆம் திகதி அகற்றப்பட்டது.
குறித்த பகுதியில் உள்ள ஒல்லாந்தர் கால சந்தைக்கட்டடத்தின் சிறப்புகள் குறித்து மும்மொழிகளிலும் கல்வெட்டு வைக்கப்பட்டிருந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பில் சட்டப்பூர்வமான காரணங்களைக் கேட்டறியவே தவிசாளரிடம் காவல்துறையினா் வாக்குமூலம் பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.


