சட்டவிரோதமாக பெருந்தொகை கைப்பேசிகளை கடத்திய நபர் கைது..!
நாட்டிற்கு பெருந்தொகையான கையடக்க தொலைபேசிகளை சட்டவிரோதமாக கடத்தி வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலையத்தில் சுங்கப்பிரிவினர் முன்னெடுத்த சோதனையின் போது குறித்த நபர் கைதாகியுள்ளார்.
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் அனுமதியின்றி, 34 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதி வாய்ந்த 390 கையடக்க தொலைபேசிகள் இவ்வாறு கடத்தி வரப்பட்டுள்ளன.
சந்தேகநபர் தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய வர்த்தகர் ஒருவர் என தெரியவந்துள்ளது.
குறித்த நபர் இன்று காலை 7.00 மணிக்கு இந்த கையடக்க தொலைபேசிகளுடன் டுபாயில் இருந்து இலங்கை விமான சேவைகள் நிறுவனத்திற்கு சொந்தமான UL-226 விமானத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

