வட்டுக்கோட்டை இந்து கல்லூரியில் வணிக சந்தை ஒன்று முன்னெடுக்கப்பட்டது..!
வணிக தினம் மற்றும் வணிக வாரத்தை முன்னிட்டு இன்றையதினம் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இந்து கல்லூரியில் வணிக சந்தை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வட்டுக்கோட்டை இந்து கல்லூரியின் வணிக பாட ஆசிரியர் சக்திவடிவேல் பிரதீபன் தலைமையில், வணிகப்பிரிவு மாணவர்களால் இந்த வணிக சந்தை திட்டமிடப்பட்டது.
நாடா வெட்டி வைக்கப்பட்டு வணிக சந்தையானது ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து மாணவர்கள் உள்ளூர் சார்ந்த உற்பத்திகள், குளிர்பானங்கள், கற்றல் உபகரணங்கள் உள்ளிட்ட பல பொருட்களை சந்தைப்படுத்தினர். மாணவர்கள் சந்தைப்படுத்திய உற்பத்தி பொருட்களை கல்லூரியின் பிரதி அதிபர் திருமதி. வதனி தில்லைச்செல்வன், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் பார்வையிட்டு அவற்றை கொள்வனவு செய்தனர்.
வணிகத்துறை சார்ந்து நல்ல ஒரு எதிர்காலத்தை பாடசாலை மட்டத்தில் உருவாக்குவதும், வர்த்தகத் துறை சார்ந்த விடயத்தை கல்வி துறையில் ஒரு உயர்ந்த பகுதியாக மாற்றும் நோக்கிலும் இந்த வணிக தினமும் வணிக வாரமும் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


