நெல்லியடியில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது..!
நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துன்னாலை காட்டுப்பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்டு வந்த சந்தேக நபரொருவர் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளார்.
புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலினடிப்படையில் நெல்லியடி பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேகநபர் கைதாகியுள்ளார்.
இதன்போது தப்பி ஓடிய மற்றைய சந்தேக நபர்களையும் கைது செய்வதற்காக நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இச்சுற்றிவளைப்பில் 50 ஆயிரம் மில்லிலீட்டர் சட்டவிரோத மதுபானம், 7 இலட்சத்து 80 ஆயிரம் மில்லிலீட்டர் கோடா மற்றும் சட்டவிரோத மதுபான உற்பத்திக்கு பயன்படுத்திய உபகரணங்களையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

