55ம் படைப் பிரிவின் இராணுவ கட்டளைத் தளபதி கிளிநொச்சி மாவட்ட பதில் அரச அதிபரை சந்திப்பு..!
கிளிநொச்சி மாவட்டத்தின் 55ம் படைப் பிரிவின் புதிய இராணுவ கட்டளை தளபதியாக பதவியேற்றுள்ள மேஜர் ஜெனரல் WMAB விஜயகோன் அவர்கள், இன்றைய தினம்(07.07.2025) கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்து கலந்துரையாடினார்.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் காலை 9.15 மணியளவில் குறித்த சந்திப்பு நடைபெற்றது.
குறித்த சந்திப்பின்போது கிளிநொச்சி மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் இராணுவ கட்டளைத் தளபதி கேட்டறிந்து கொண்டார்.
இக் கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) இ.நலாஜினி, 55ம் படைப் பிரிவின் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அதிகாரி லெப்டினன் கேணல் ULC ஜெயசேனா ஆகியோர் கலந்து கொண்டனர்.


