முழங்காவில் மாலை நேர உழவர் சந்தை மீள திறந்து வைக்கப்பட்டுள்ளது..!

முழங்காவில் மாலை நேர உழவர் சந்தை மீள திறந்து வைக்கப்பட்டுள்ளது..!

பூநகரி பிரதேசசபையின் ஆளுகைக்குட்பட்ட முழங்காவில் மாலை நேர உழவர் சந்தை கடந்த புதன்கிழமை(25) மீள திறந்து வைக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் விவசாயிகளிற்கான சந்தை வாய்ப்பினை உருவாக்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்ட மாலைநேர உழவர் சந்தையே இவ்வாறு உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மாலைநேர உழவர் சந்தையின் பெயர்ப்பலகையினை சபையின் தவிசாளர் சிவகுமாரன் சிறீரஞ்சன் திறந்து வைக்க, நாடாவை முழங்காவில் விவசாயியொருவரும் பிரதேசசபை உறுப்பினரும் வெட்டி திறந்து வைத்திருந்தனர்.

இங்கு சபையின் தவிசாளர் சிவகுமாரன் சிறீரஞ்சன் தனது உரையில் உள்ளூர் விவசாயிகளிற்கான நியாயமான சந்தை வாய்ப்பினை உருவாக்கவே மாலைநேர உழவர் சந்தை திறந்து வைக்கப்படுகின்றது. முழங்காவிலிலிருந்து நாள் தோறும் பத்தாயிரம் கிலோகிராம் வரையில் வாழை தம்புள்ள சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. ஆனால் விவசாயிகளிற்கு உரிய சந்தை வாய்ப்பு ஏதும் கிட்டாத நிலையே தொடர்ந்தும் காணப்படுகின்றது. திறந்து வைக்கப்பட்டுள்ள மாலைநேரச்சந்தையில் விவசாயிகள் எதிர்வரும் மூன்று மாதங்களிற்கு எத்தகைய கட்டணமுமின்றி தங்கள் உற்பத்திகளை நேரடியாக விற்பனை செய்யமுடியுமென தெரிவித்தார்.

முழங்காவில் பொதுச்சந்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மாலைநே உழவர் சந்தை மாலை 4.00மணியின் பின்னர் இயங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்குரார்ப்பண தினமன்றே விவசாயிகள் தமது உற்பத்திகளை நேரடியாக விற்பளை செய்வதில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin