வடக்கில் 5941 ஏக்கர் காணிகளை அரச காணிகளாக்கி கையகப்படுத்துவதற்கான வர்த்தமானிக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் சற்று முன் உத்தரவு பிறப்பித்தது.

வடக்கில் 5941 ஏக்கர் காணிகளை அரச காணிகளாக்கி கையகப்படுத்துவதற்கான வர்த்தமானிக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் சற்று முன் உத்தரவு பிறப்பித்தது.

நாளைய தினம் (28.06.2025) காலக்கெடு முடிவடையும் கடைசித் தறுவாயில் இந்த உத்தரவு தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் ம.சுமந்திரன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை வழக்கில் வழங்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதியரசர்கள், யசந்த கோதாகொட, சம்பத் அபேகோன் மற்றும் சம்பத் விஜயரத்ன உள்ளிட்ட நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. எனது சார்பில் ஆஜரான மூத்த ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி கே. கனகேஸ்வரன், ஜனாதிபதி சட்டத்தரணி விரான் கொரயா, சட்டத்தரணிகள் பவானி பொன்சேகா, லக்ஷ்மணன் ஜெயக்குமார், ரவீந்திரன் நிலோஷன் மற்றும் பெனிஸ்லோஸ் துஷான் ஆகியோருக்கும் இந்த வழக்கை துரிதமாக தாக்கல் செய்து உத்தரவுகளை பெற உதவிய எனது பதிவு செய்யப்பட்ட சட்டத்தரணிகள் சின்னதுரை சுந்தரலிங்கம் பாலேந்திரா சட்ட நிறுவன தலைவர் சட்டத்தரணி மோகன் பாலேந்திரா மற்றும் சகாக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தார் தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் ம.சுமந்திரன்

Recommended For You

About the Author: admin