கிளிநொச்சி மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு கணினி பயிற்சி..!
கிளிநொச்சி மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு நான்கு நாட்களைக் கொண்ட முழுநேர கணினி பயிற்சி நடைபெற்றுவருகின்றது.
குறித்த பயிற்சிநெறி உத்தியோகத்தர்களின் வினைத்திறனை மேம்படுத்தும் நோக்கில் பயிற்சி மற்றும் ஆளணி பிரிவினரின் ஏற்பாட்டில், மாவட்டச் செயலக திறன் விருத்தி நிலையத்தில் நடைபெற்றுவருகின்றது.
இதன்போது Basic Hardware & Networking, Computer Maintanance & Google Form Preparation தொடர்பான பயிற்சி 17.06.2025 மற்றும் 18.06.2025 தினங்களில் நடைபெற்றது.
தொடர்ந்து Advanced MS Word &Excel, Al & LGN தொடர்பான பயிற்சிநெறி இன்றைய தினம்(24.06.2025) ஆரம்பமாகி நடைபெற்றுவருவதுடன் நாளையும்(25) நடைபெறவுள்ளது.
இன்றைய தினம் பயிற்சி நெறியின் விடயங்கள் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்கள் உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடியிருந்ததுடன், இக்கற்கை விடயங்களை தங்கள் கிளைகள் சார்ந்த வேலைகளுக்கு எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார்.
இதன் வளவாளர்களாக கிளிநொச்சி மாவட்டச் செயலக தகவல் தொடர்பாடல் உத்தியோகத்தர் நர்மதா, மாவட்ட விதாதா உத்தியோகத்தர் முரளிதரன், தகவல் தொடர்பாடல் உதவியாளர் தனுஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.

