இரண்டாவது நாளாகவும் செம்மணியில் தொடர்ந்து எரியும் அணையா விளக்கு..!

இரண்டாவது நாளாகவும் செம்மணியில் தொடர்ந்து எரியும் அணையா விளக்கு..!

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி “அணையா தீபம்” தொடர் போராட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரண்டாம் நாளாகவும் தொடர்கின்றது.
செம்மணி பகுதியில் அமைந்துள்ள யாழ் வளைவை அண்மித்த பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை அணையா தீபம் ஏற்றப்பட்டு போராட்டம் ஆரம்பமானது.

நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை நிகழ்வாக செம்மணி தொடர்பான கதை வாசிப்பும், இரவு நிகழ்வாக ஆவணப்படம் திரையிடலும் இடம்பெற்ற நிலையில் இன்றைய தினமும் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

போராட்டத்தில் ஏற்றப்பட்டுள்ள அணையா தீபத்திற்கு , எண்ணெய், மலர் அஞ்சலி செலுத்துவதற்கான மலர்கள் என்பவற்றை தந்து உதவுமாறு மக்களிடம் ஏற்பாட்டளர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin