வலி. வடக்கில் தொடரும் போராட்டம்..! இன்று காணி உறுதிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

வலி. வடக்கில் தொடரும் போராட்டம்..! இன்று காணி உறுதிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

யாழ்ப்பாணம் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 2ஆயிரத்து 400 ஏக்கர் காணிகளை விடுவிக்க கோரி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நான்காம் நாளாக காணி உறுதிகளுடன் உரிமையாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
நான்காவது நாளான இன்றைய தினம் காணிக்கான தமது உறுதிகளை எடுத்து வந்து அதனை காண்பித்து போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

காணிகளை விடுவிக்க கோரி கடந்த சனிக்கிழமை மயிலிட்டி சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள மக்கள் அப்பகுதியிலையே உணவு சமைத்து, அருந்தி அவ்விடத்தை விட்டு நகராமல் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin