பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளராக சுப்பிரமணியம் சுரேன் ஏக மனதாக தெரிவு..!

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளராக சுப்பிரமணியம் சுரேன் ஏக மனதாக தெரிவு..!

தெரிவின்றி கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளராக சுப்பிரமணியம் சுரேன் ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டார்.

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி பாபு தலைமையில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை சபை மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது இலங்கை தமிழரசுக்கட்சி சார்ந்த சுப்பிரமணியம் சுரேன் பெயர் பரிந்துரைக்கப்பட்டபோது ஏனைய தெரிவு இல்லாத நிலையில் சுப்ரமணியம் சுரேன் தெரிவு செய்யப்பட்டார்.

 

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பாக 06உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தி சார்பாக 03உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி சார்பாக 03உறுப்பினர்களும் அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் சார்பாக 01உறுப்பினரும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. உப தவிசாளராக சிவகுரு செல்வராசா தெரிவு செய்யப்பட்டார்.

Recommended For You

About the Author: admin