அராலி நீளத்திக்காடு பேச்சியம்பாள் ஆலய கப்பல் திருவிழா!

அராலி நீளத்திக்காடு பேச்சியம்பாள் ஆலய கப்பல் திருவிழா!

அராலி மேற்கு ஸ்ரீ பேச்சியம்பாள் ஆலயத்தின் வருடாந்த அலங்கார வேள்வி உற்சவத்தின் 6ஆம் திருவிழாவான நேற்றையதினம் முத்துச் சப்பரத் திருவிழாவானது சிறப்பாக நடைபெற்றது.

கருவறையில் வீற்றிருக்கும் பேச்சியம்பாளுக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து வசந்த மண்டப பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பேச்சியம்பாள் கப்பலில் எழுந்தருளியாக வீற்றிருந்து வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதன்போது வாண வேடிக்கைகளும் இடம்பெற்றன.

ஆலயக் கிரியைகளை துஷ்யந்தக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடாத்தி வைத்தனர். பல பாகங்களிலும் இருந்து வருகைதந்த பக்தர்கள் அம்பாளை தரிசித்து இஷ்ட சித்திகளை பெற்றுச் சென்றனர்.

 

கடந்த 17.06.2025 அன்று ஆரம்பமான திருவிழாவானது 25.06.2025 அன்று வேள்வி உற்சவத்துடன் நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin