இனப்படுகொலை செய்யப்பட்டதனை ஐ.நா. ஆணையாளரிடம் எடுத்துரைக்கவுள்ளதாக அர்ச்சுனா எம்.பி. தெரிவித்துள்ளார்..!

தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதனை ஐ.நா. ஆணையாளரிடம் எடுத்துரைக்கவுள்ளதாக அர்ச்சுனா எம்.பி. தெரிவித்துள்ளார்..!

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது இனப்படுகொலைதான் என்பதை ஐநா ஆணையாளரிடம் கூறுவேன் என பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்ததுடன் என்னை பாராளுமன்றம் செல்லவிடாது தடுப்பதற்கு பல தடைகள் ஏற்படுத்தப்படுகிறது என தெரிவித்தார்.

 

செம்மணியில் ஆரம்பமான அணையா விளக்கு போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார் .

 

அவர் மேலும் தெரிவிக்கையில்

 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டோர்க் அவர்களை சந்திப்பதற்கு பாராளுமன்ற கட்சி தலைவர்களுக்கு அனுமதியுள்ளது.

 

இந்த சந்திப்பில் நானும் ,பாராளுமன்ற உறுப்பினர்கள் ,செல்வம் அடைக்கல நாதன்,சிவஞானம் சிறிதரன் ஆகியோரும் வருவார்கள் இதன்போது முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது இனப்படுகொலைதான் என்பதை நாங்கள் கூறும்போது அவர்களும் கூறவேண்டும்.

 

காரணம் என்னை பாராளுமன்றம் செல்லவிடகூடாது என்பதை கூடியளவிற்கு தடை ஏற்படுத்துகிறார்கள்

எவ்வாறாயினும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டு முள்ளிவாய்காலில் இடம்பெற்றது இனப்படுகொலை தான் என்பதையும் செம்மணி மனித புதை குழி ,மற்றும் மண்டைதீவில் இடம்பெற்றதாக கூறும் மனித புதைகுழி போன்ற விடயங்கள் தொடர்பில் விரிவான அறிக்கை,மற்றும் ஆவணங்களை மனித உரிமைகள் போரவை ஆணையாளரிடம் கையளிப்பேன் என்றார்.

Recommended For You

About the Author: admin